/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திறமைசாலிகளை உருவாக்கும் பி.ஜி.பி., கல்லுாரி திறமைசாலிகளை உருவாக்கும் பி.ஜி.பி., கல்லுாரி
திறமைசாலிகளை உருவாக்கும் பி.ஜி.பி., கல்லுாரி
திறமைசாலிகளை உருவாக்கும் பி.ஜி.பி., கல்லுாரி
திறமைசாலிகளை உருவாக்கும் பி.ஜி.பி., கல்லுாரி
ADDED : ஜூன் 01, 2025 01:53 AM
நாமக்கல், நாமக்கல் பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, 30 ஆண்டுக்கு முன், பி.ஜி.பி., குழும தலைவர் பழனி ஜி பெரியசாமியால் நிறுவப்பட்டது. இக்கல்லுாரி என்.எச்.44 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கட்டமைப்பு வசதிகள் அனைத்தும், மிகச்சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் உயர் கல்வி பெற்று அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களின் ஆளுமையை வளர்க்க, என்.சி.சி.,-என்.எஸ்.எஸ்.,-ஒய்.ஆர்.சி.,-ஆர்.ஆர்.சி., போன்றவை செயல்படுத்தப்படுகிறது.தன்னாட்சி பெற்ற கல்லுாரியாக இருப்பதால், வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தொழில் முனைவோர் திறன் பெற, தொழில் முனைவோர் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விபரங்களுக்கு, 89398 08573 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.