/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேர்தல் விதிகளால் பொலிவிழந்த நிழற்கூடங்கள் புதுப்பிக்கப்படுமா?தேர்தல் விதிகளால் பொலிவிழந்த நிழற்கூடங்கள் புதுப்பிக்கப்படுமா?
தேர்தல் விதிகளால் பொலிவிழந்த நிழற்கூடங்கள் புதுப்பிக்கப்படுமா?
தேர்தல் விதிகளால் பொலிவிழந்த நிழற்கூடங்கள் புதுப்பிக்கப்படுமா?
தேர்தல் விதிகளால் பொலிவிழந்த நிழற்கூடங்கள் புதுப்பிக்கப்படுமா?
ADDED : ஜூன் 20, 2024 06:42 AM
நாமக்கல் : லோக்சபா தேர்தல் விதிகளால், பயணியர் நிழற்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு நலத்திட்ட அறிவிப்புகள் அகற்றப்பட்டன.
இதனால் நிழற்கூடங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. மீண்டும் அரசு நலத்திட்ட அறிவிப்புகளை பொருத்த, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த மார்ச், 16ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, தேர்தல் விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து அரசியல் கட்சி கொடிக்கம்பம், பேனர், சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டன. கட்சி தலைவர்களின் சிலைகளையும், துணி கொண்டு மறைக்கப்பட்டன. மேலும், பயணியர் நிழற்கூடத்தில் இருந்த மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விளம்பரங்களும் அகற்றப்பட்டன. தற்போது, லோக்சபா தேர்தல் முடிந்து, விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ஆனால், பயணியர் நிழற்கூடத்தில் அகற்றப்பட்ட அரசு திட்ட விளம்பரங்களை மீண்டும் வைக்கவில்லை. அதனால் அந்த நிழற்கூடங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன.எனவே, நிழற்கூடங்களில் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அல்லது பஸ்கள் வந்து செல்லும் நேர அட்டவணை அறிவிப்புகளை பொருத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.