/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்துபீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து
ADDED : ஜூன் 20, 2024 06:42 AM
நாமக்கல் : பீஹாரில் இருந்து, 2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் பகுதியில் செயல்படும் கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருளான மக்காச்சோளம் பீஹார் மாநிலம், ககாரியாவில் இருந்து, 2,600 டன் வாங்கி அங்கிருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து, 100 லாரிகளில் ஏற்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.