/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளரை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராத எச்சரிக்கை தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளரை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராத எச்சரிக்கை
தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளரை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராத எச்சரிக்கை
தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளரை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராத எச்சரிக்கை
தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளரை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராத எச்சரிக்கை
ADDED : செப் 11, 2025 01:53 AM
நாமக்கல் :'நாமக்கல் மாநகராட்சியில், தெருநாய்களை பிடிக்க வரும், பணியாளர்களை தடுத்தால், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, கமிஷனர் சிவக்குமார், சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. சமீபகாலமாக, மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த ஆண்டு மட்டும், மாநகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த, 1,060 நாய்களை, மாநகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநகராட்சி பணியாளர்கள் பல இடங்களில் தெரு நாய்களை பிடிக்க செல்லும் போது, அப்பகுதி மக்கள், நாய்களுக்கு உரிமை கொண்டாடி, அதனை பிடிக்க முடியாதபடி தடை செய்கின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் வீட்டிற்குள் நாய்கள் வளர்ப்பவர்கள் அனைவரும், மாநகராட்சிக்கு விண்ணப்பித்து, கட்டாயம் 'லைசென்ஸ்' பெற வேண்டும்.
இதற்கான உரிய விண்ணப்பத்தில் விபரங்களை தெரிவித்து, நாய்க்கு சமீபத்தில் வெறிநோய் தடுப்பூசி போட்டதற்கான மருத்துவ சான்றிதழையும் இணைக்க வேண்டும். மாநகராட்சியிடம் 'லைசென்ஸ்' பெறாவிட்டால், நாய்களின் உரிமையாளர்களுக்கு, 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள், நாய்களை தங்களுடன் அழைத்து செல்லும்போது, நாய்களின் வாயை மாஸ்க் மூலம் மூடியபடி, கழுத்து பட்டையில் சங்கிலி போட்டு பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல வேண்டும். ஆக்ரோஷமான நாய்களை வீடுகளில் வளர்க்கக்கூடாது.
மேலும், மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடிக்க வரும்போது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், 25,000 முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.