/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கிழக்கு மாவட்ட பா.., சார்பில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம்கிழக்கு மாவட்ட பா.., சார்பில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம்
கிழக்கு மாவட்ட பா.., சார்பில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம்
கிழக்கு மாவட்ட பா.., சார்பில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம்
கிழக்கு மாவட்ட பா.., சார்பில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம்
ADDED : ஜன 06, 2024 12:56 PM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்ட சிறப்பு முகாம் கிராமங்கள் தோறும் நடந்து வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பொதுமக்களிடையே விண்ணப்பங்கள், ஆவணங்கள் பெறும் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.
அங்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் கம்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆயுதம் ஏந்துபவர்கள், முடி திருத்துபவர்கள், கூடை தயாரிப்பவர்கள் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு நிதியுதவி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் பயனடைய பலரும் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி
வருகின்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., நிர்வாகிகள் ஷேக்தாவூத், பழனியப்பன், வடிவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.