/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விடிய, விடிய ஆற்று மணல் கடத்தல் காமாட்சி நகரில் அதிகாரிகள் 'கொர்...'விடிய, விடிய ஆற்று மணல் கடத்தல் காமாட்சி நகரில் அதிகாரிகள் 'கொர்...'
விடிய, விடிய ஆற்று மணல் கடத்தல் காமாட்சி நகரில் அதிகாரிகள் 'கொர்...'
விடிய, விடிய ஆற்று மணல் கடத்தல் காமாட்சி நகரில் அதிகாரிகள் 'கொர்...'
விடிய, விடிய ஆற்று மணல் கடத்தல் காமாட்சி நகரில் அதிகாரிகள் 'கொர்...'
ADDED : ஜன 03, 2024 12:54 PM
ப.வேலுார்: காவிரி ஆற்றில் விடிய, விடிய ஆற்று மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன் வராததால், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு, காமாட்சி நகர், பாலப்பட்டி,ப.வேலுார் ஈஸ்வரன் கோவில் பகுதிகளில், இரவு நேரத்தில், லாரி, டெம்போ, இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக, காமாட்சி நகரில் லாரி, லாரியாக மணல் கடத்தல் சம்பவம் நாள்தோறும் நடந்து வருகிறது.
ஆனால், மணல் கடத்தலை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை அதிகாரிகள், மவுனம் காத்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தும் கும்பல், அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சேதப்படுத்தியும், பீஸ்கேரியரை பிடுங்கியும் அட்டூழியம் செய்து வருகின்றனர். காவிரியாற்றில் மணல் கடத்தலால், மண்வளம், நீர்வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு என அனைத்து அபாயங்களும் ஏற்படும் நிலையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.