/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காவிரி பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைகாவிரி பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
காவிரி பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
காவிரி பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
காவிரி பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்-ளது.நாமக்கல் - ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்-மட்டம் பாலம், பழைய பாலம் என, இரு பாலங்கள் உள்ளது.
இந்த இரண்டு பாலத்திலும் வாகனங்கள் சென்று வருகிறது. பள்-ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பிரிவு பகுதியில் இருந்து, ஒன்பதாம்படி ஆற்றுப்பகுதி வரை, ஒரு வழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இதில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்திலும், வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பரபரப்பாக காணப்பட்ட பழைய பாலம், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் பணி முடிந்த பின்பு தான், பழைய பாலத்தில் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். பழைய பாலத்தில் செல்லும் வாக-னங்கள் அனைத்தும், தற்போது உயர்மட்ட பாலத்தின் வழியாக செல்கிறது.