/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணியின்போது இறந்த, 15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான நல வாரியத்தில், ஆட்டோ ஓட்டுனர்கள், 20,758 பேர், கட்டுமான தொழிலாளர்கள், 1,32,960 பேர், இதர உடல் உழைப்பு தொழிலாளர்கள், 1,76,254 உள்பட 3.29 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
உறுப்பினர்க-ளுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவித்-தொகை, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு ஆகியவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்ப-டுகிறது. தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்-களுக்கு மட்டும்தான் உதவித்தொகை கிடைக்கும்.ஆனால், உறுப்பினர்கள் இல்லாதவர்களும் பயன்பெறும் திட்டம் உள்ளதாக, மாவட்ட தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புதிட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும்போது இறக்கும் உறுப்பி-னர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் விபத்து ஏற்-பட்டால், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. கட்டு-மான தொழிலாளர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும். கடந்த மூன்று ஆண்டுகளில், 4 உறுப்பினர்கள் மற்றும், 11 உறுப்பினர் இல்லாதவர்கள் என மொத்தம், 15 பேர் கட்டுமான பணியின் போது இறந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழி-லாளர் நலவாரியத்தில், உறுப்பினராக இணைந்து அரசு தரும் பல்-வேறு சலுகைகளை பெறலாம். இவ்வாறு கூறினார்.