Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றிச்செல்லும் வாகனம் ஆன்லைனில் 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம்

ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றிச்செல்லும் வாகனம் ஆன்லைனில் 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம்

ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றிச்செல்லும் வாகனம் ஆன்லைனில் 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம்

ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றிச்செல்லும் வாகனம் ஆன்லைனில் 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம்

ADDED : ஜூன் 18, 2025 01:24 AM


Google News
நாமக்கல், 'ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், ஆன்லைனில் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் சுரங்கங்கள், குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச்செல்ல வழித்தட சான்றுகள் அனைத்தும், கடந்த ஏப்., 15 முதல் இணையதளம் மூலம் ஆன்லைனில்

விண்ணப்பிக்கப்பட்டு, 'இ-பர்மிட்' எனப்படும் நடைச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஏப்., 21 முதல் கிரஷர், குவாரி குத்தகை லைலெசன்ஸ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள கிரஷர் யூனிட்டுகள் மற்றும் குடோன்களில் இருந்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்ல, 'டிரான்சிட் பாஸ்' எனப்படும் கனிம நடைச்சீட்டு பெற வேண்டும். கனிம ஸ்டாக் குடோன்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்ல, கடந்த, 14 முதல் 'டிரான்சிட் பாஸ்' எனப்படும் கனிம கடவுச்சீட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பாஸ் பெற, இணைய முகவரி மூலம் மட்டுமே, பதிவு சான்று பெற்ற அனைத்து கிரஷர், குவாரி, குடோன் உரிமையாளர்களும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us