/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
ADDED : ஜூன் 18, 2025 01:23 AM
நாமக்கல், பெங்களூருவில் இருந்து ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 170 கிலோ புகையிலை பொருட்களை மோகனுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், குட்கா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விற்பனை மறைமுகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் போலீசார், மோகனுார்-வாங்கல் பிரிவு சாலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த, 'மாருதி ஆம்னி' வேனை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும், டிரைவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக
பதிலளித்துள்ளார்.
கிடுக்கிப்பிடி விசாரணையில், கரூர் மாவட்டம், வெண்ணைமலையை சேர்ந்த முருகவேல், 27, என்பதும், மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக, கர்நாடகா மாநிலம், பெங்களூவில் இருந்து புகையலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 170 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.