/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் மாவட்டத்தில் நாளை பல்வேறு திட்ட பணிகள் துவக்கம் நாமக்கல் மாவட்டத்தில் நாளை பல்வேறு திட்ட பணிகள் துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பல்வேறு திட்ட பணிகள் துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பல்வேறு திட்ட பணிகள் துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பல்வேறு திட்ட பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 01:16 AM
நாமக்கல்,நாமக்கல் மாவட்டத்தில், நாளை (ஜூன் 7) காலை, 9:00 மணியளவில் நாமக்கல் முதலைப்பட்டி புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 11 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்
பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சியில், 2 கோடியே, 96 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற ஐந்து திட்டப்பணிகளை திறந்து வைத்து, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ சேவை மையம் மற்றும் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்கிறார்.
இத்தகவலை, மாவட்ட கலெக்டர் உமா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.