/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 01, 2024 11:47 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் வட்டாரம், 67.கவுண்டம்பாளையம் கிராமத்தில், வேளாண்மைதுறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், 'வேளாண்மை விற்பனை மற்றும் வணிகவரி துறையின் உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு' என்ற தலைப்பில், 40 விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்து, வேளாண்மைதுறை சார்ந்த மத்திய, மாநில அரசு திட்டங்கள், நுண்ணீர் பாசனம், விதைப்பண்ணை முறை, பசுமை இயக்கம், மரக்கன்று திட்டம் குறித்து விளக்கமளித்தார்.
இதேபோல், வேளாண் விற்பனை, வணிக அலுவலர் கலைச்செல்வி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் உட்கட்டமைப்புகள் மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக விளக்கமளித்தார். வேளாண்மை விற்பனை உதவி அலுவலர் பாலலிங்கேஸ்வரன், இ--சந்தை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் சக்திவேல், 'உழவன்செயலி' பதிவிறக்கம், பயன்பாடு மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருள்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் கோகுல், துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.