Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி

மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி

மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி

மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி

ADDED : ஜூன் 28, 2025 07:59 AM


Google News
ராசிபுரம்: மத்திய அரசு நலத்திட்டப்பிரிவின், மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின், 'ஜன சிக்ஷான் சன்சதன்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் பயிற்சி, ஆண்களுக்கு பைக் மெக்கானிக், எலக்ட்ரீஷியன் பிளம்பர், பெயின்டிங் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நாமகிரிப்பேட்டை பகுதியில், 10 குழுகளுக்கு மேல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ராசிபுரம் மற்றும் வெண்ணந்துார் பகுதிகளில் இது போன்ற பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.விருப்பமுள்ளவர்கள், எந்த கிராமத்திற்கு தொடங்க வேண்டும் என்று விபரத்தை தெரிவித்தால் அவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக பயிற்சி வழங்கப்படும் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சான்றிதழ் வழங்கப்படும் அவர்களுக்கு வங்கி மூலம் தொழில் தொடங்குவதற்கு கடன் பெறுவதற்கு வழி காட்டப்படும். விபரங்களுக்கு, 9884255511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us