நாகர்பாளையம் விவசாயிகளுக்கு பயிற்சி
நாகர்பாளையம் விவசாயிகளுக்கு பயிற்சி
நாகர்பாளையம் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 13, 2024 04:14 AM
மல்லசமுத்திரம்,: மல்லசமுத்திரம் வட்டாரம், நாகர்பாளையம் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராம அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம், நேற்று நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்து, வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய அலுவலர் தனம், உழவர் பயிற்சி நிலைய செயல்பாடுகள், அட்மா திட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் பற்றி எடுத்துரைத்து, விதைநேர்த்தி குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயப்பிரபா, தோட்டக்கலை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், நுண்ணீர் பாசன திட்டம் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் வழங்குதல் பற்றி எடுத்துரைத்தார்.பட்டுவளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் தமிழ்செல்வி, பட்டுவளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம் பற்றி கூறினார். வணிகத்துறை உதவி அலுவலர் தங்கவேல், உழவர்சந்தையின் செயல்பாடுகள், உழவர்சந்தை விற்பனை அடையாள அட்டை பெறுதல், ஒழுங்குறை விற்பனைகூடம் ஏலம் முறைகள் பற்றி கூறினார். கால்நடைத்துறை உதவி மருத்துவர் கோமதி, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய், தடுப்பூசியின் அவசியம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் மோகன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி ஆகியோர் செய்திருந்தனர்.