ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கம்பன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கங்காதரன் உள்ளிட்ட போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, விற்பனை செய்த ஸ்ரீதர், 27, என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.