/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நிலக்கடலையில் 'போரான்' பற்றாக்குறை தவிர்க்க 'டிப்ஸ்'நிலக்கடலையில் 'போரான்' பற்றாக்குறை தவிர்க்க 'டிப்ஸ்'
நிலக்கடலையில் 'போரான்' பற்றாக்குறை தவிர்க்க 'டிப்ஸ்'
நிலக்கடலையில் 'போரான்' பற்றாக்குறை தவிர்க்க 'டிப்ஸ்'
நிலக்கடலையில் 'போரான்' பற்றாக்குறை தவிர்க்க 'டிப்ஸ்'
ADDED : ஜூலை 15, 2024 01:05 AM
நாமகிரிப்பேட்டை: நிலக்கடலையில், 'போரான்' பற்றாக்குறையை தவிர்க்க வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நிலக்கடலை அதிகளவு பயிரி-டப்பட்டுள்ளது. நிலக்கடலையில், 'போரான்' பற்றாக்குறை காணப்படுகிறது. 'போரான்' பற்றாக்குறை ஏற்பட்டால், கடலை காய்களின் தோளில் கறுப்பு நிற புள்ளிகள் காணப்படும். பருப்பு சிறுத்து பொக்கு கடலைகள் அதிகரிக்கும். விதையின் கரு குருத்-துகள் பழுப்பு நிறமாக மாறி பின் கருகி விடும். போரான் சத்து குறைபாடு உள்ள மண்ணில் ஒரு ஹெக்டேருக்கு, 10 கிலோ போராக்ஸை அடியுரமாக இட வேண்டும். 0.3 சதம் போராக்ஸ் கரைசலை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருவாயில், 15 நாட்கள் இடைவெளியில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.