/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், முருங்கைக்காடு பகுதியில், 'கர்சீப்' தயா-ரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஸ்ராஜ், 41.
இவர் கடந்த, 11 இரவு, 7:00 மணியளவில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை, அலுவலக லாக்கரில் வைத்துச்சென்றார். மறுநாள் காலை, 9:00 மணியளவில் இவரது அலுவலக மேலாளர் தனசேகரனுக்கு வந்த போன் அழைப்பில், 'அலுவலக பின்புற தகர சீட் உடைக்கப்-பட்டு, லாக்கர் கீழே வீசப்பட்டுள்ளது' என, தகவல் வந்தது. சம்-பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவ-ணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகார்-படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.