ADDED : மே 22, 2025 02:01 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் யூனியன், பொட்டணத்தில் கிழக்கு மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று முன்திம் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழா
நடந்தது.
இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.