/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
மல்லசமுத்திரம்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நாடு முழுதும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; சட்டப்படி அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாயத்து நிர்வா-கிகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாகர்பாளையம் பஞ்சாயத்தில், ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேல், ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.