/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இரண்டாம் நாள் தேரோட்டம் 'நமசிவாய' கோஷத்தால் சிலிர்ப்பு இரண்டாம் நாள் தேரோட்டம் 'நமசிவாய' கோஷத்தால் சிலிர்ப்பு
இரண்டாம் நாள் தேரோட்டம் 'நமசிவாய' கோஷத்தால் சிலிர்ப்பு
இரண்டாம் நாள் தேரோட்டம் 'நமசிவாய' கோஷத்தால் சிலிர்ப்பு
இரண்டாம் நாள் தேரோட்டம் 'நமசிவாய' கோஷத்தால் சிலிர்ப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:35 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
'ஆணுக்கு பெண் சரிநிகர் சமம்' என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், உமையொருபாகனாக சிவபெருமான் காட்சியளிக்கும் உலக பிரசித்தி பெற்ற தலமாக, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழகத்தின் நான்காவது பெரிய தேரோட்டம், மூன்று நாட்கள் நடைபெறும்.
அதன்படி, நேற்று முன்தினம், முதல் நாள் தேரோட்டம் துவங்கியது. அதில், தேர்நிலையில் இருந்து கிழக்கு ரத வீதி பூக்கடை கார்னரில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று, பூக்கடை கார்னரில் இருந்து தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, அண்ணாசிலை, பழைய பஸ் ஸ்டாண்டை கடந்து வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இந்த தேரோட்டத்தின்போது, 'நமசிவாய' கோஷம் விண்ணை பிளந்ததால் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
நாளை, மூன்றாம் நாள் தேரோட்டம் நடைபெற்று தேர் நிலை நிறுத்தப்படும். வரும், 14 அதிகாலையில் இருள் பிரியும் வேளையில் உமையொருபாகன் பரிவாரங்களுடன் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.