/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம் அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்
அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்
அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்
அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்
ADDED : ஜூன் 12, 2025 01:35 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில், ஆங்கில வழியில் கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, ஆங்கில வழியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர் மற்றும் மாணவியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.