/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ செல்லாண்டியம்மன் கோவில் துாக்குத்தேர் விழா கோலாகலம் செல்லாண்டியம்மன் கோவில் துாக்குத்தேர் விழா கோலாகலம்
செல்லாண்டியம்மன் கோவில் துாக்குத்தேர் விழா கோலாகலம்
செல்லாண்டியம்மன் கோவில் துாக்குத்தேர் விழா கோலாகலம்
செல்லாண்டியம்மன் கோவில் துாக்குத்தேர் விழா கோலாகலம்
ADDED : மே 29, 2025 01:51 AM
மோகனுார் :மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 22ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, சுவாமி துாக்குத்தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, எஸ்.வாழவந்தியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும், பக்தர்கள் மாவிளக்கு பூஜை செய்தும், எல்லை ஓடும் நிகழ்ச்சியும் நடந்தது. அதையடுத்து, ஊமை புலி குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.