ADDED : ஜூலை 07, 2024 01:06 AM
எருமப்பட்டி : நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள சின்னவேப்பனம் அடுத்து ஆண்டவர் நகர், மாருதிநகர், கங்கா நகர் உள்ளிட்ட பகு-திகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும், 'சம்ப்' குடிநீர் தொட்டி உள்ளது. மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை இங்கு தேக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்-படுகிறது.
இங்கிருந்து குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சின்ன வேப்பனம் அருகே, கடந்த, 2 நாளாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் நீண்ட நேரம் வீணாகி வருகிறது. எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்-துள்ளது.