/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்டத்தில் 3 நாளில் 250 மி.மீ., மழை பதிவுமாவட்டத்தில் 3 நாளில் 250 மி.மீ., மழை பதிவு
மாவட்டத்தில் 3 நாளில் 250 மி.மீ., மழை பதிவு
மாவட்டத்தில் 3 நாளில் 250 மி.மீ., மழை பதிவு
மாவட்டத்தில் 3 நாளில் 250 மி.மீ., மழை பதிவு
ADDED : ஜூன் 04, 2024 04:08 AM
நாமக்கல்: மாவட்டத்தில், மூன்று நாட்களில், 250 மி.மீட்டரும், நேற்று ஒரே நாளில், 156.50 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக, பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், தென்மாவட்ட பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகம் முழுதும், ஒரு சில இடங்களில், கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதும் தொடர்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் தொடர்ந்துமழை பெய்து மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, எருமப்பட்டி பகுதியில், அதிகளவில் மழை பெய்துள்ளது.
நேற்று காலை, 6:00 மணிவரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:
எருமப்பட்டி, 40, குமாரபாளையம், 6.60, மங்களபுரம், 20.40, மோகனுார், 5, நாமக்கல், 12.20, ப.வேலுார், 4, புதுச்சத்திரம், 8.20, ராசிபுரம், 11.20, சேந்தமங்கலம், 25, திருச்செங்கோடு, 6.90,
கொல்லிமலை, 17 என, மொத்தம், 156.50 மி.மீ., மழை
பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 1ல், 45.50 மி.மீ., 2ல்,
48.30 மி.மீ., என, மூன்று
நாட்களில், 250.30 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.