/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : ஜூன் 04, 2024 04:07 AM
நாமக்கல்: கேரளா, ஆந்திரா உள்ளிட்ட, 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் தென்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளாவில் உள்ள ஆழப்புழா, கோட்டயம், பந்தனம்திட்டா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லுார், மஹாராஷ்டிராவில் நாக்பூர், ஜார்கண்டில், ராஞ்சி மாவட்டம் ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய், 'எச்5என்1' பரவி வருவது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 'எச்5என்1' வைரஸ் காய்ச்சல் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் மற்றும் கோழி இனங்களின் மூலம் பரவும் தன்மை கொண்டது.
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட, 4 மாநிலங்களில் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோழிப்பண்ணைகளின் வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் பண்ணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டு, உயிரி பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இங்கு பறவை காய்ச்சல் நோய் பரவும் வாய்ப்பு இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.