Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ADDED : ஜூலை 22, 2024 08:16 AM


Google News
நாமக்கல், ; நாமக்கல் நகரின் மையத்தில், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நின்றபடி வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்-சநேயர், 24 மணி நேரமும் அருள் பாலிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் புத்தாண்டு, அமா-வாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழ-மைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும்.

அந்த வகையில், நேற்று ஆடி முதல் ஞாயிற்றுக்-கிழமை மற்றும் பவுர்ணமியையொட்டி, காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்-காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதணை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரி-சனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us