/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கோலாகலம்சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கோலாகலம்
சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கோலாகலம்
சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கோலாகலம்
சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கோலாகலம்
ADDED : பிப் 25, 2024 04:02 AM
எருமப்பட்டி: சேந்தமங்கலம், வருதராஜ பெருமாள் கோவில் மாசி மாத தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேந்தமங்கலத்தில், பழமையான வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மாசி மாத தேர் திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை வருதராஜ பெருமாள், சோமேஸ்வரர் திருத்தேர் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை வருதராஜ பெருமாள் கோவில் தேர்த்
திரு விழா நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ராஜேஸ்குமார் எம்.பி., தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அட்மா குழு தலைவர் அசோக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபால் உள்பட ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.