ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, புதன் சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது.
இந்த சந்தைக்கு நாமக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த மாட்டு சந்தையில், 1.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.