/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நுாறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்நுாறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
நுாறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
நுாறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
நுாறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
எலச்சிபாளையம்: தமிழகம் முழுதும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு, '100 நாள் வேலைக்கொடு; வேலை கொடுக்க முடியாவிட்டால், சட்டப்படி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடு தழுவிய அளவில், ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, நேற்று, எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கொன்னையார், கிளாப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அதிகாரிகளிடத்தில் மனு அளித்து, அதற்கு உண்டான ஒப்புகை சீட்டு பெற்றுக்கொண்டனர். மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், மணிகண்டன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேல் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.