/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் சிவன் கோவிலில் சேக்கிழார் குரு பூஜை விழா ராசிபுரம் சிவன் கோவிலில் சேக்கிழார் குரு பூஜை விழா
ராசிபுரம் சிவன் கோவிலில் சேக்கிழார் குரு பூஜை விழா
ராசிபுரம் சிவன் கோவிலில் சேக்கிழார் குரு பூஜை விழா
ராசிபுரம் சிவன் கோவிலில் சேக்கிழார் குரு பூஜை விழா
ADDED : ஜூன் 02, 2025 06:45 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், வரலாற்று சிறப்பு மிக்க கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 63 நாயன்மார்களின் சிலைகள் உள்ளன. இதில், நீரால் விளக்கேற்றிய எம்பிரான் நமிநந்தி அடிகள், தெய்வ சேக்கிழார் பெருமான் குருபூஜை பெருவிழா இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம்
செய்யப்பட்டிருந்தது.
விழாவையொட்டி, எம்பிரான் நமிநந்தி அடிகள், தெய்வ சேக்கிழார் ஐம்பொன் திருமேனிகளுடன் திருவீதி உலா நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்குடன் ஊர்வலம் சென்றனர். மேலும், சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.