/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இன்று பள்ளிகள் திறப்பு நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்இன்று பள்ளிகள் திறப்பு நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
இன்று பள்ளிகள் திறப்பு நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
இன்று பள்ளிகள் திறப்பு நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
இன்று பள்ளிகள் திறப்பு நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஜூன் 10, 2024 01:14 AM
நாமக்கல்: கோடை விடுமுறைக்கு பின் இன்று (ஜூன், 10) பள்ளிகள் திறப்பதால், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
'தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு, 10ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி, இன்று (ஜூன், 10), தமிழகம் முழுதும் அனைத்து பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் முடித்துள்ளனர்.
இதற்கிடையில், விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பியவர்கள் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியை நோக்கி, நேற்று படையெடுத்தனர். அதனால், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், நேற்று மாலை, வழக்கத்தை காட்டிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி செல்லும் பஸ்களில் முண்டி அடித்துக்கொண்டு பயணிகள் ஏறி இடம் பிடிப்பதை காணமுடிந்தது. மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தும் அவை போதுமானதாக இல்லாத நிலையே நீடித்தது. வேறுவழியின்றி, தாங்கள் செல்லும் பஸ்சிற்காக பயணிகள் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஒரு வழியாக தாங்கள் செல்லும் பகுதிக்கு வந்த பஸ்சில் முண்டி அடித்தபடி ஏறி சென்று நின்று கொண்டே பயணத்தை தொடர்ந்தனர்.