/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேசிய லோக் அதாலத் 1,055 வழக்கில் ரூ.10.48 கோடி 'பைசல்'தேசிய லோக் அதாலத் 1,055 வழக்கில் ரூ.10.48 கோடி 'பைசல்'
தேசிய லோக் அதாலத் 1,055 வழக்கில் ரூ.10.48 கோடி 'பைசல்'
தேசிய லோக் அதாலத் 1,055 வழக்கில் ரூ.10.48 கோடி 'பைசல்'
தேசிய லோக் அதாலத் 1,055 வழக்கில் ரூ.10.48 கோடி 'பைசல்'
ADDED : ஜூன் 10, 2024 01:11 AM
நாமக்கல்: மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,055 வழக்குகளில், 10.48 கோடி ரூபாய், 'பைசல்' செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய அளவிலான லோக் அதாலத் நடந்தது. மாவட்ட தலைமை நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்தார். நீதிபதிகள் பாலகுமார், விஜயகார்த்திக், பிரவீனா, பிரபா சந்திரன், விஜயகுமார், மோகனபிரியா மற்றும் வட்ட அளவிலான சட்டப்பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்
பட்டது.
அதேபோல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றங்களிலும் தேசிய லோக் அதாலத் நடந்தது. மாவட்டம் முழுதும், மொத்தமாக, 1,102 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அவற்றில், 1,055 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, 10 கோடியே, 47 லட்சத்து, 60,416 ரூபாய் செலுத்தி, 'பைசல்' செய்யப்பட்டது.