/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாலையோர மீன் கடைகளால் விபத்து அபாயம்சாலையோர மீன் கடைகளால் விபத்து அபாயம்
சாலையோர மீன் கடைகளால் விபத்து அபாயம்
சாலையோர மீன் கடைகளால் விபத்து அபாயம்
சாலையோர மீன் கடைகளால் விபத்து அபாயம்
ADDED : பிப் 12, 2024 11:26 AM
ப.வேலுார்: ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே, தினசரி சாலையோர மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே இருப்பதால், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஆபத்தை உணராமல் கடைகளை நடத்தி வருவதால், விபத்து அபாயம் நிலவுகிறது. மீன் வாங்கும் ஆர்வத்தில் சாலையில் நிற்கும் பகுதிவாசிகள், விபத்தில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், வியாபாரத்தை முடித்துவிட்டு, சிலர் மீன் கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்துள்ளது. சிலர், இருசக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துகின்றனர். இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.
ப.வேலார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், மீன் கடை நடத்த, வாழை மார்க்கெட்டில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கே கடைகளை நடத்தாமல் தார்ச்சாலையில் நடத்துகின்றனர்.
எனவே, ப.வேலுார் போலீசார் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.