/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாரச்சந்தையில் பசுமை பந்தல் அமைத்து தர வேண்டுகோள் வாரச்சந்தையில் பசுமை பந்தல் அமைத்து தர வேண்டுகோள்
வாரச்சந்தையில் பசுமை பந்தல் அமைத்து தர வேண்டுகோள்
வாரச்சந்தையில் பசுமை பந்தல் அமைத்து தர வேண்டுகோள்
வாரச்சந்தையில் பசுமை பந்தல் அமைத்து தர வேண்டுகோள்
ADDED : செப் 12, 2025 02:24 AM
சேந்தமங்கலம், வெயில் வாட்டி வரும் நிலையில், காளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையில், பசுமை பந்தல் அமைத்து தர வேண்டும்.
காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில், வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நீண்ட காலமாக சேந்தமங்கலம்---ராசிபுரம் பிரதான சாலையின் இரு புறமும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது புதிய வாரச்சந்தை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு சில வியாபாரிகள் வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது சித்திரை மாதத்தில் அடிக்கும் வெயிலை விட அதிகமாக வெப்பம் வீசுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அவர்களின் நலன் கருதி, அந்த பகுதியில் பசுமை பந்தல் அமைத்து கொடுக்க வேண்டும்.