ADDED : ஜூன் 05, 2025 01:42 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. டவுன் பஞ்.,க்குட்பட்ட பல இடங்களில் மாலை நேரத்தில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. குடியிருப்பு தோறும் கொசு மருந்து அடித்தாலும், சில நாட்களில் மீண்டும் கொசு தொல்லை அதிகரித்து விடுகிறது.
எனவே, குடியிருப்பு எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் பணியாளர்களை நியமித்து, சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.