/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கறவை பசுக்களுக்கு அடர் தீவனம் அளிக்க யோசனை கறவை பசுக்களுக்கு அடர் தீவனம் அளிக்க யோசனை
கறவை பசுக்களுக்கு அடர் தீவனம் அளிக்க யோசனை
கறவை பசுக்களுக்கு அடர் தீவனம் அளிக்க யோசனை
கறவை பசுக்களுக்கு அடர் தீவனம் அளிக்க யோசனை
ADDED : ஜூன் 05, 2025 01:42 AM
நாமக்கல், 'கறவை பசுக்களுக்கு, அடர் தீவனத்துடன், தானுவாஸ் தாது உப்பு கலவை அளிக்கலாம்' என, விவசாயிகளுக்கு, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மண்டல வானிலை மையம் யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், அடுத்த ஐந்து நாட்கள் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். பகல் வெப்பம், 96.8 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு, 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். கறவை பசுக்களில் ஒரு பசுவுக்கு நாளொன்றுக்கு, 30 முதல், 50 கிராம் என்ற அளவில் அடர் தீவனத்துடன் தானுவாஸ் தாது உப்பு கலவை அளிக்கவும். ஆடுகளில், துள்ளுமாரி நோய் என்றழைக்கப்படும் எண்டிரோடாக்ஸிமியா நோய், கிளாஸ்டீரிடியம் எனப்படும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் புதிதாக முளைத்த பசுமையான புற்களை மேயும் ஆடுகளுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும்.
இது எல்லா வயது ஆடுகளையும் தாக்கினாலும், இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்நோய்க்கு எதிரான தடுப்பூசியை அருகிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, மழைக்காலத்திற்கு முன்பாக தடுப்பூசி அளித்து ஆடுகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.