/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரேஷன் குறைதீர் முகாம்: 123 மனுக்களுக்கு தீர்வு ரேஷன் குறைதீர் முகாம்: 123 மனுக்களுக்கு தீர்வு
ரேஷன் குறைதீர் முகாம்: 123 மனுக்களுக்கு தீர்வு
ரேஷன் குறைதீர் முகாம்: 123 மனுக்களுக்கு தீர்வு
ரேஷன் குறைதீர் முகாம்: 123 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 01:54 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி, இம்மாதத்திற்கான பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் என, எட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடந்தது. அந்தந்த வட்ட வழங்கல் தாசில்தார் தலைமை வகித்தனர்.
நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், மொபைல் எண் சேர்த்தல் குறித்து, 29 மனுக்களை அளித்தனர். 8 தாலுகாவில் நடந்த முகாமில், 123 மனுக்கள் வரப்பெற்றன. அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டன.