ADDED : மே 20, 2025 07:30 AM
ராசிபுரம்: இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், ஒன்பது தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த வெற்றியை, பா.ஜ.,வினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், வரும், 23ல் தேசிய கொடி பேரணி நடக்கவுள்ளது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக, மாவட்ட துணைத்தலைவர் சேதுராமன், பொருளாளர் ரவி, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளராக, பொதுச்செயலாளர் பிரபு, நாமக்கல் தொகுதிக்கு ராம்குமார், ராசிபுரம் தொகுதிக்கு சுகன்யா ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற உள்ள நிர்வாகிகள் பட்டியலையும், மாவட்ட தலைவர் சரவணன் வெளியிட்டுள்ளார்.