/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'வந்தே பாரத்' ரயில் செல்வதால் ராசிபுரத்தில் தண்டவாளம் சீரமைப்பு'வந்தே பாரத்' ரயில் செல்வதால் ராசிபுரத்தில் தண்டவாளம் சீரமைப்பு
'வந்தே பாரத்' ரயில் செல்வதால் ராசிபுரத்தில் தண்டவாளம் சீரமைப்பு
'வந்தே பாரத்' ரயில் செல்வதால் ராசிபுரத்தில் தண்டவாளம் சீரமைப்பு
'வந்தே பாரத்' ரயில் செல்வதால் ராசிபுரத்தில் தண்டவாளம் சீரமைப்பு
ADDED : ஜூன் 24, 2024 07:10 AM
ராசிபுரம்: சேலம் - நாமக்கல் - கரூர் ரயில் பாதை, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
தொடக்கத்தில் இந்த வழித்தடத்தல் சரக்கு ரயில்கள் விடப்பட்டன. பின், இந்த ரயில்பாதை மின் பாதையாக மாற்றிய பின் பயணிகள் ரயில், எக்ஸ் பிரஸ் ரயில்கள் விடப்பட்டுள்ளன. சமீபத்தில், 'வந்தே பாரத்' ரயிலும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.வழக்கமாக, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரயில் பாதையில் ஜல்லி கற்கள் நகர்ந்து தொய்வாக உள்ளதா, கட்டைகள் சரியாக உள்ளனவா என்பதை பார்ப்பது வழக்கம். தற்போது, 'வந்தே பாரத்' இந்த வழிதடத்தில் செல்வதால், பாதையை கண்காணித்து சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.இதற்கான பாதையை பேக்கிங் செய்யும் தானியங்கி ரயில் பெட்டியில் சென்று பாதை சீரமைக்கப்பட்டது. நேற்று, மல்லுாரில் இருந்து ராசிபுரம் வரை உள்ள ரயில் பாதையை ஆய்வு செய்தனர்.