Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மண் பரிசோதனை முகாம் அட்டவணை வெளியீடு

மண் பரிசோதனை முகாம் அட்டவணை வெளியீடு

மண் பரிசோதனை முகாம் அட்டவணை வெளியீடு

மண் பரிசோதனை முகாம் அட்டவணை வெளியீடு

ADDED : ஜன 05, 2024 11:25 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளிடமிருந்து மண், நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டையை அன்றைய தினமே வழங்கி வருகிறது. மண்ணின் தன்மை, நீர் மாதிரியில் -அமிலத்தன்மை, கரையும் உப்புக்களின் அளவு, நீரின் வகைப்பாடு, நீரின் தன்மைக்கேற்ப சாகுபடி பயிர்கள், பிரச்னைக்குரிய நீர் மேலாண்மை முறைகள் தெரிவிக்கப்படும்.

நாமக்கல் மாவட்டம், வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணபாளையத்தில் நடமாடும் மண்பரிசோதனை ஆய்வகமும் இயங்கி வருகின்றது. மண் மற்றும் நீர் மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக தலா, 20 ரூபாய் செலுத்தி விவசாயிகள் பயன் பெறலாம்.

வரும், 10ல் எடப்புளி கிராமத்தில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாம், 11ல் எருமப்பட்டி வட்டாரம் வடவத்துார், 19ல் மோகனுார் வட்டாரம் மணப்பள்ளி, 24ல் எலச்சிப்பாளையம் வட்டாரம் மண்டகாப்பாளையம், 30ல் கபிலர்மலை, ஏ.வெங்கரை கிராமத்தில் மண் பரிசோதனை முகாம் நடக்கிறது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us