/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:53 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் யூனியன், அத்தனுார் டவுன் பஞ்., 1-வது வார்டு கோம்பைக்காடு செல்லும் வழியில் பெருமாள் கோவில் கரடு பகுதியில் புதிதாக மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி துவங்கவுள்ள நிலையில், அத்தனுார் டவுன் பஞ்., 1-வது வார்டு பகுதி மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், வருவாய்த்துறையினர் கிராம கணக்கில் பெருமாள் கோவில் கரடு உள்ளது. மேலும், பொதுமக்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் பெருமாள் கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மலைக்கரட்டை நம்பி, இப்பகுதி மக்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். புதிதாக அமைய இருக்கும் மின் மயானம் அருகே நீர்நிலை குட்டைகள் உள்ளன. இதனால் இந்த நீர்நிலை குட்டைகள் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இதை சுற்றியுள்ள கிணறுகளில் தண்ணீர் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிதாக அமைய இருக்கும் மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.