/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோவில் மரங்கள் பொது ஏலம்; எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு கோவில் மரங்கள் பொது ஏலம்; எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கோவில் மரங்கள் பொது ஏலம்; எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கோவில் மரங்கள் பொது ஏலம்; எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கோவில் மரங்கள் பொது ஏலம்; எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
ADDED : ஜன 08, 2025 06:47 AM
நாமக்கல்: ப.வேலுார் தாலுகா, பொத்தனுாரில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 12.42 ஏக்கர் புன்செய் நிலங்கள் உள்ளன. இவை, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது.
அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன் முன்னிலையில், கோவில் தக்கார் கிருஷ்ணராஜ் ஏலத்தை நடத்தினார். இந்த நிலத்தில், 495 தென்னை மரங்கள், ஒரு புளிய மரம் போன்றவை உள்ளன. இவை, 4 இனங்களாக பிரித்து பொது ஏலம் விடப்பட்டது. மொத்தம், 9.24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மட்டுமே என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே ஏலத்தில் பங்கேற்க வந்த ஒரு தரப்பினரை கலந்துகொள்ள அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி போலீசார் தடுத்தனர். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., சங்கீதா தலைமையிலான போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.