Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அறிவு திருக்கோவிலில்உலக அமைதி வார விழா

அறிவு திருக்கோவிலில்உலக அமைதி வார விழா

அறிவு திருக்கோவிலில்உலக அமைதி வார விழா

அறிவு திருக்கோவிலில்உலக அமைதி வார விழா

ADDED : ஜன 08, 2025 03:11 AM


Google News
அறிவு திருக்கோவிலில்உலக அமைதி வார விழா

நாமக்கல், நாமக்கல் அறிவு திருக்கோவில் சார்பில், உலக அமைதி வார விழா, கடந்த, 1ல் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில் பேசப்பட்டது. மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை செயலாளர் சுப்ரமணியன், 'இறையுணர்வா, அறநெறியா', ஆழியார் விஷன் இணை இயக்குனர், 'தவம் செய்ய விரும்பு', சேலம் அயோத்தியாபட்டணம், ஆர்.எஸ்.தவமையம் பேராசிரியர் ராஜேந்திரன், 'நலம் செய்ய விரும்பு', உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் தங்கவேலு, 'அறங்காவலர் பொறுப்பும், கடமையும்' என்ற தலைப்பில் பேசினர்.

ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், 'மாணவர்களுக்கு மனவளக்கலை' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். நிறைவு நாளான நேற்று, ஆழியார் இணை இயக்குனர் விவேகானந்தன், 'மவுனத்தின் மேன்மை' என்ற தலைப்பில் பேசினார். உலக அமைதி வார விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us