/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆடிப்பெருக்கு பண்டிகை சமயத்தில் சாலையில் பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்புஆடிப்பெருக்கு பண்டிகை சமயத்தில் சாலையில் பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு
ஆடிப்பெருக்கு பண்டிகை சமயத்தில் சாலையில் பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு
ஆடிப்பெருக்கு பண்டிகை சமயத்தில் சாலையில் பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு
ஆடிப்பெருக்கு பண்டிகை சமயத்தில் சாலையில் பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, ஆலாம்பாளையம் செல்லும் பிரதான வழித்தடத்தில் இருந்து ஆர்.எஸ்., சாலை பிரிகிறது. இந்த ஆர்.எஸ்., சாலை வழியாக காவிரி, கொக்கராயன்பேட்டை, மொளசி, தாஜ்நகர், சோழசிராமணி, எஸ்.பி.பி., காலனி உள்ளிட்ட பகுதிக்கு செல்லலாம். மேலும், பிரசித்தி பெற்ற கண்ணனுார் மாரியம்மன் கோவில், இந்த சாலையில் தான் அமைந்துள்ளது. இந்த ஆர்.எஸ்., சாலை துவங்கும் இடத்தில், நெடுஞ்சாலை சார்பில் வடிகால் அமைக்க, நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல், சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால், நேற்று முதல் ஆர்.எஸ்., வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு நாளில் பொங்கல் திருவிழா நடக்கும். அதையொட்டி, ஆடி, 17 முதல் ஆடி, 19 வரை நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். அவர்கள், தீர்த்தக்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். தற்போது, இந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், கண்ணனுார் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பொது மக்கள் பெரி தும் பாதிப்புக்குள்ளாவர். பண்டிகை நேரத்தில், இவ்வாறு சாலையில் பள்ளம் தோண்டியதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.