/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சென்ட்ரிங் தகடுகளை திருடியவருக்கு 'காப்பு' சென்ட்ரிங் தகடுகளை திருடியவருக்கு 'காப்பு'
சென்ட்ரிங் தகடுகளை திருடியவருக்கு 'காப்பு'
சென்ட்ரிங் தகடுகளை திருடியவருக்கு 'காப்பு'
சென்ட்ரிங் தகடுகளை திருடியவருக்கு 'காப்பு'
ADDED : செப் 11, 2025 02:01 AM
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் அருகே, கட்டடத்தில் அடுக்கி வைத்திருந்த, 'சென்ட்ரிங்' தகடுகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த படத்தையன் குட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில், 54; பில்டிங் கான்ட்ராக்டர். இவர், கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள மெஜஸ்டிக் காலனியில் கட்டடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன், 'சென்ட்ரிங்' அடிக்க பயன்படுத்தும் இரும்பு தகடுகளை, கட்டுமான பணி நடந்துவரும் கட்டடத்தில் அடுக்கி வைத்திருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 50 சென்ட்ரிங் தகடுகள் காணவில்லை.
இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசில், செந்தில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தார். அதில், நாமக்கல் மாவட்டம், செல்லப்பா காலனியை சேர்ந்த சூர்யா, 24, என்பவர், 'சென்ட்ரிங்' தகடுகளை திருடியது தெரியவந்தது. நேற்று முன்தினம், சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.