/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது மாணவன் உயிரிழப்பு தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது மாணவன் உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது மாணவன் உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது மாணவன் உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது மாணவன் உயிரிழப்பு
ADDED : செப் 11, 2025 01:59 AM
குடியாத்தம் குடியாத்தம் அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த, 6 வயது மாணவன் உயிரிழந்தான்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காத்தாடி குப்பம் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பிரபு, 35. இவரது மகன் மாதேஷ், 6, அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.
உடன் விளையாடிய சிறுவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, மாதேஷின் பெற்றோர் வந்து மீட்டனர். பின்னர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார், விசாரித்து வருகின்றனர்.