/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரம் உழவர் சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வுராசிபுரம் உழவர் சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு
ராசிபுரம் உழவர் சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு
ராசிபுரம் உழவர் சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு
ராசிபுரம் உழவர் சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு
ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், மூன்று வாரங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, இரண்டு வாரங்களாக தக்காளி விலை குறைய தொடங்கியது.
தற்போது, மழை காரணமாக, மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த வாரம் கிலோ, 32 ரூபாய்க்கு விற்ற தக்காளி, நேற்று, 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கத்தரிக்காய் விலை வாரம் வாரம் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய், நேற்று, 75 ரூபாய்க்கு விற்றது.
தக்காளி கிலோ, 68, கத்தரி, 75, வெண்டை, 30 புடலை, 40, பீர்க்கன், 50 பாகல், 70, சுரைக்காய், 12, பச்சை மிளகாய், 68, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 48, முட்டைகோஸ், 50 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 142 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 11,545 கிலோ காய்கறி, 4,355 கிலோ பழங்கள், 195 கிலோ பூக்கள் என மொத்தம், 16,095 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 6.90 லட்சம் ரூபாயாகும்.