/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போலீசார் ரூ.10,000 அபராதம் விதிப்பு: பூக்களை சாலையில் கொட்டி போராட்டம்போலீசார் ரூ.10,000 அபராதம் விதிப்பு: பூக்களை சாலையில் கொட்டி போராட்டம்
போலீசார் ரூ.10,000 அபராதம் விதிப்பு: பூக்களை சாலையில் கொட்டி போராட்டம்
போலீசார் ரூ.10,000 அபராதம் விதிப்பு: பூக்களை சாலையில் கொட்டி போராட்டம்
போலீசார் ரூ.10,000 அபராதம் விதிப்பு: பூக்களை சாலையில் கொட்டி போராட்டம்
ADDED : ஜன 04, 2024 11:40 AM
நாமக்கல்: சேலம் போலீசார், 10,000 ரூபாய் அபராதம் விதித்ததை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் பூ வியாபாரி ஒருவர் நாமக்கல்லில் போராட்டம் நடத்தினார்.
திருச்செங்கோடு, சீதாராம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன், 38. இவர், அதே பகுதியில் சாலையோர பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த பூசாரிப்பட்டியில் இருந்து சாமந்தி பூக்களை வாங்கி, மூன்று சாக்கு மூட்டைகளில் கட்டி தனக்கு சொந்தமான காரின் மேல் கட்டிக்கொண்டு திருச்செங்கோடு சென்றார்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, விதிகளை மீறி காரில் பூக்கள் மூட்டை எடுத்துச்சென்றதாக கூறி, ஆன்லைன் மூலம் போக்குவரத்து போலீசார், 10,000 ரூபாய் அபராதம் விதித்து, அதற்குண்டான குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமன், தாய் மீனாவை அழைத்துக்கொண்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு, கேட்டின் முன் பூக்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, 'சேலம் மாவட்ட நிர்வாகத்துடன், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கலந்துபேசி, தன்னுடைய அபராதத்தை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்' என்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நல்லிப்பாளையம் போலீசார், விசாரணை நடத்துவதாக கூறி, பூக்களை அள்ளிக்கொண்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.