ADDED : செப் 16, 2025 02:03 AM
மோகனுார், தமிழக மக்களை, அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைக்கும் ஒப்புயர்விலா செயல் திட்டத்தின் கீழ், நம் மண் மொழி மானம் காக்க, 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் இயக்கத்தை, தி.மு.க., தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வாக்காளரையும், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தில் இணைக்கும் பணியில், தி.மு.க., நிர்வாகிகள் தீவிராக ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு இணைந்த பொதுமக்களை, ஓட்டுச்சாவடி வாரியாக, பூத் ஏஜன்ட்டுகள், கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மோகனுார் ஒன்றியம், பேட்டப்பாளையம் பஞ்., மணியங்காளிப்பட்டியில் நடந்தது.
கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் நவலடி தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 'தமிழகத்தின் மண், -மொழி, -மானம் காக்க, தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம்' என, ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியை ஏற்றனர். ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.