/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புரட்டாசி பிறப்பையொட்டி ஆடு விற்பனை மந்தம் புரட்டாசி பிறப்பையொட்டி ஆடு விற்பனை மந்தம்
புரட்டாசி பிறப்பையொட்டி ஆடு விற்பனை மந்தம்
புரட்டாசி பிறப்பையொட்டி ஆடு விற்பனை மந்தம்
புரட்டாசி பிறப்பையொட்டி ஆடு விற்பனை மந்தம்
ADDED : செப் 16, 2025 02:04 AM
எருமப்பட்டி :எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, புதுக்கோட்டை, நவலடிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதேபோல், ஆடுகளை வாங்கிச்செல்ல திருச்சி, துறையூர், முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில், சந்தையில் சுங்க கட்டணம் அதிகம் காரணமாக விவசாயிகள் ஆடுகள் கொண்டுவருவதை குறைத்தனர். மேலும், நாளை முதல் புரட்டாசி விரதம் தொடங்க உள்ளதால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டு, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்தது.